துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற தி.மலை மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயனுக்கு கோப்பை

வெற்றி கோப்பைகளுடன் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர்.
வெற்றி கோப்பைகளுடன் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

திருவண்ணாமலை: வடக்கு மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு கோப்பை வழங்கப்பட்டது.

வடக்கு மண்டல அளவிலான காவல்துறையினர் பங்கேற்ற துப்பாக்கி சுடுதல் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் கடந்த 3 மற்றும் 4-ம் தேதி நடைபெற்றது. வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் தலைமையில் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை பங்கேற்றனர்.

காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் ஒட்டுமொத்த துப்பாக்கி சுடுதலில் முதலிடத்தை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பிடித்தார். மேலும், இன்சாஸ் ரக துப்பாக்கி சுடுதலில் முதலிடத்தையும், பிஸ்டல் ரக துப்பாக்கி சுடுதலில் 2-ம் இடத்தையும் பிடித்துள்ளார்.

மேலும், ஒட்டுமொத்த துப்பாக்கி சுடுதலில் 3-ம் இடத்தை வந்தவாசி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்தி பிடித்துள்ளார். இதேபோல், பெண் காவலர்களுக்கான துப்பாக்கி சுடுதலில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் காவலர்கள் 5 பதக்கங்களை வென்றனர். வெற்றி பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு கோப்பை மற்றும் பரிசு வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in