

சென்னை: மநீம பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம், கட்சி நிர்வாகிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: மநீம கட்சியின் கட்டமைப்பை வலுவாக்கவும், நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராக இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி, கடந்த மார்ச் 26-ம் தேதி வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. அடுத்த கட்டமாக பூத் கமிட்டி களை வலுவாக்குவது, புதிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் இன்று (ஏப். 4) திருப்பூரிலும், நாளை (ஏப். 5) கோவையிலும் நடைபெற உள்ளன.
நாடாளுமன்றத் தொகுதி வாரியாக நடைபெறும் இக்கூட்டங்களில், திருப்பூர், ஈரோடு ஆகிய தொகுதிகளுக்கு இன்றும், கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளுக்கு நாளையும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. எனவே, குறிப்பிட்ட நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட மண்டலச் செயலாளர் மற்றும் மாவட்டச்செயலாளர்கள், அனைத்து நிர்வாகிகளுடன் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.