

சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்துக்கு எண்ணூரில் 450 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் உடைய அனல்மின் நிலையம் இருந்தது. இது 1970-ல் செயல்பாட்டுக்கு வந்தது. இதன் ஆயுட் காலத்தையும் தாண்டி செயல்பட்டதால் அடிக்கடி பழுது ஏற்பட்டது.
இதையடுத்து, கடந்த 2017-ம் ஆண்டு முதல் அதில் நிரந்தரமாக மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டது. அந்த இடத்தில் 2 ஆயிரம் மெகாவாட் திறனில் எரிவாயு மின்நிலையம் அமைக்க மின்வாரியம் முடிவு செய் துள்ளது. இதற்காக, எண்ணூர் மின்நிலையத்தில் உள்ள ஜென ரேட்டர் உள்ளிட்ட தளவாடங்கள் அகற்றப்பட உள்ளன.
ஒவ்வொரு சாதனத்தின் மதிப்பையும் தற்போதைய சந்தை விலைக்கு ஏற்ப மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து விற்கப்பட உள்ளன.
இதனை, மதிப்பீடு செய்து தரும் பணிக்காக நிறுவனங் களுக்கு கடந்த ஜனவரியில் மின்வாரியம் அழைப்பு விடுத்தது. அதில் பங்கேற்ற நிறுவனங்கள் மதிப்பீடு செய்வதில் தாமதம் செய்வதால் விற்பனை செய்யும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், எண்ணூர் எரிவாயு மின்நிலைய பணியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.