அறிவித்து பல மாதங்களாகியும் அதிகாரிகள் அலட்சியம்: தேனி - போடி இடையே ரயிலை நீட்டிப்பதில் இழுபறி

அறிவித்து பல மாதங்களாகியும் அதிகாரிகள் அலட்சியம்: தேனி - போடி இடையே ரயிலை நீட்டிப்பதில் இழுபறி
Updated on
1 min read

போடி: சென்னை மற்றும் மதுரை ரயிலை போடி வரை நீட்டித்து இயக்குவதற்கான அறிவிப்பு வந்து பல மாதங்களாகியும் தெற்கு ரயில்வே துறையின் மந்தமான செயல்பட்டால் போடி பகுதி மக்கள் விரக்தியடைந்துள்ளனர்.

அகலப்பாதைப் பணிக்காக 2010-ம் ஆண்டு டிசம்பரில் நிறுத்தப்பட்ட மதுரை-போடி மீட்டர்கேஜ் ரயில், மிகக் குறைவான நிதி ஒதுக்கீடு, கரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நீண்ட, நெடிய தாமதமாகி 2022-ல் தேனி வரை மட்டுமே பணிகள் முடிந்தன. பின்னர் ஒருவழியாக மே 27 முதல் ரயில் சேவை தொடங்கியது.

தேனியில் இருந்து 15 கிமீ.தூரம் உள்ள போடி வரையிலான பணிகளும் அடுத்த சில மாதங் களில் முடிந்தன. இதைத் தொடர்ந்து மதுரையில் இருந்து தேனி வரை வரும் ரயி லையும், சென்னையில் இருந்து மதுரை வரை வரும் ஏசி.எக்ஸ்பிரஸ் ரயிலையும் போடி வரை நீட்டிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால், பல மாதங்களாகியும் நீட்டிப்பதாக அறிவித்த ரயில் இயக் கப்படவே இல்லை. இதனால், ரயில் பயணிகள் சங்கத்தினர், பொதுமக்கள், வர்த்தகர்கள் என்று பல தரப்பினரும் அதிகாரிகளுக்கு நினைவூட்டி வருகின்றனர்.

மேலும், சமூக வலைதளங்களிலும் தங்களின் ஆதங்கங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். தேனி மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இதுகுறித்த தீர்மானங் களும் நிறை வேற்றப்பட்டன.

இந்நிலையில், ஏப்.8-ம் தேதி பிரதமர் மோடி இந்த நீட்டிப்பு ரயிலை இயக்குவார் என்ற எதிர் பார்ப்பு இருந்தது. ஆனால் நிகழ்ச்சி நிரலில் இது குறித்த விவரம் ஏதும் இடம்பெறவில்லை.

தெற்கு ரயில்வே அதிகாரப் பூர்வமாக அறிவித்த ஒரு நீட்டிப்பு ரயிலை இயக்க பல மாதங்களாகக் கோரிக்கை, வலியுறுத் தல், நினைவூட்டல், தீர்மானம் நிறைவேற்றுதல், கடிதம் எழுதுதல் என்று தொடர்ந்து போராட வேண் டியதிருக்கிறதே என்ற நிலை போடி மக்களுக்கு விரக்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பி.சரவணக்குமார் கூறு கையில், அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், ரயில் இயக்கு வதற்கான அறிவிப்பு வந்து பல மாதங்களான நிலையில் இன்னமும் போடிக்கு ரயில் இயக்காதது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்த ரயிலை இயக்கினால்தான் புனலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிக் கான கூடுதல் ரயில்களையும் கேட்டுப் பெற முடியும், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in