இபிஎஸ் | கோப்புப்படம்
இபிஎஸ் | கோப்புப்படம்

ஏப்.7-ல் அதிமுக செயற்குழுக் கூட்டம்: இபிஎஸ் அறிவிப்பு

Published on

சென்னை: அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இம்மாதம் 7-ம் தேதியன்று அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுக செயற்குழுக் கூட்டம் வரும் 07.04.2023 வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு, சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.

இக்கூட்டத்தில், கட்சியின் செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள், பிற மாநில கழகச் செயலாளர்கள், கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் 7.4.2023 அன்று நடைபெறும் என தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in