

சென்னை: பொதுமக்களிடம் அன்போடும், கனிவோடும் நடந்துகொள்ள வேண்டும் என போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கி உள்ளார்.
தமிழகத்தில் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்க டிஜிபி சைலேந்திரபாபு பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார். அவ்வப்போது காவல் நிலையங்களுக்கு சென்று திடீர் ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, சென்னை ஐசிஎப் காவல் நிலையத்துக்கு நேற்று திடீரென சென்ற டிஜிபி சைலேந்திரபாபு, பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, காவல் நிலைய பதிவேடுகளை பார்வையிட்டு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். பொதுமக்களிடம் கனிவோடும், அன்போடும் நடந்து கொள்ள வேண்டும். அவர்களின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸாருக்கு அறிவுரை வழங்கினார்.