Published : 03 Apr 2023 06:06 AM
Last Updated : 03 Apr 2023 06:06 AM
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.4.95 லட்சம் பணத்துடன் கீழே கிடந்த பையை எடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்த நகைக்கடை உரிமையாளரை எஸ்பி பாராட்டினார்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள நகைக்கடை அருகே கடந்த 17-ம் தேதி கேட்பாரற்று பை ஒன்று கிடந்துள்ளது. இதை அந்த பகுதியில் உள்ள நகைக்கடை உரிமையாளரான ஞானபால் என்பவர் எடுத்து பார்த்தபோது, அதில் ரூ.4.95 லட்சம் பணம் மற்றும் ஜவுளிக்கடையில் வாங்கப் பட்ட புதிய சேலை ஆகியவை இருந்தன.
இதையடுத்து பணம் மற்றும் சேலையை தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் அவர் ஒப்படைத்தார். இது குறித்து மத்தியபாகம் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தியதில் பணத்துடன் பையை தவற விட்டவர் தூத்துக்குடியில் நகைக்கடை நடத்தி வரும் ஆனந்த சுப்பிரமணியன் என்பதை உறுதி செய்தனர்.
இதனை தொடர்ந்து நேர்மை யாக செயல்பட்ட ஞானப்பாலை மாவட்ட காவல் அலுவலகத்துக்கு நேரில் அழைத்து எஸ்பி எல்.பாலாஜி சரவணன் சால்வை அணிவித்து பாராட்டினார். மேலும், ஞானபால் மூலம் பணம் மற்றும் சேலையை அதன் உரிமையாளரான ஆனந்த சுப்பிரமணியனிடம் நேரில் வழங்கச் செய்தார். அப்போது மத்திய பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கியப்பன் மற்றும் போலீஸார் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT