Published : 01 Apr 2023 02:41 PM
Last Updated : 01 Apr 2023 02:41 PM

குடும்பங்களுக்கு குறைந்த விலையில் அதிவேக இணைய சேவை: தமிழக தகவல் தொழில்நுட்ப துறையின் புதிய அறிவிப்புகள்

புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்

சென்னை: குடும்பங்களுக்கு ரூ.100 கோடியில் குறைந்த விலையில் அதிவேக இணைய சேவைகள் வழங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.1) தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் பதில் அளித்து பேசிய பிறகு, புதிய அறிவிப்புகளை மனோ தங்கராஜ் வெளியிட்டார். இதன் விவரம்:

  • ரூ.20 கோடியில் சோழிங்கநல்லூர் ELCOSEZ வளாகத்தில் உலகத்தரத்தில் பசுமைப் பூங்கா அமைக்கப்படும்.
  • ரூ.40 கோடியில் எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை பசுமை தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களாக சர்வதேச தரத்தில் மேம்படுத்துதல்
  • The Animation, Visual Effects, Gaming and Comic கொள்கை உருவாக்கப்படும்.
  • ரூ.1.72 கோடியில் தமிழ்நாடு நலத்திட்டப் பயனாளிகளுக்கான நேரடிப் பயன் பரிமாற்றத் தளம் (Tamil Nadu DBT Platform) உருவாக்கப்படும்.
  • ரூ. 11 கோடியில் தமிழ்நாடு இணைய வழி அரசு சேவைகளுக்கான ஒற்றை நுழைவு தளம் உருவாக்கப்படும்.
  • தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு அமைப்பு (AI Mission) உருவாக்கப்படும்.
  • ரூ.1.20 கோடியில் கூடுதலாக 100 புதிய சேவைகளை இ-சேவைகள் மக்கள் சேவை தளத்தில் வழங்கப்படும்.
  • ரூ.184 கோடியில் 20,000 அரசு அலுவலகங்கள் & நிறுவனங்களுக்கு அதிவேக இணைய இணைப்பு வழங்கப்படும்.
  • ரூ.100 கோடியில் மாநிலத்தில் உள்ள குடும்பங்களுக்கு குறைந்த விலையில், அதிவேக இணைய சேவைகள் வழங்கப்படும்.
  • தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (iTNT-Hub) 2ம் கட்ட மற்றும் 3வது கட்ட நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x