Published : 01 Apr 2023 12:54 PM
Last Updated : 01 Apr 2023 12:54 PM

சென்னை வள்ளுவர் கோட்டம் நவீன முறையில் புனரமைப்பு: பொதுப்பணித்துறை தகவல்

வள்ளுவர் கோட்டம்

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டம் நவீன முறையில் புனரமைக்கப்படும் என்று பொதுப்பணித்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 1974ம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியால் வள்ளுவர் கோட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பின்னர் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில், வள்ளுவர் கோட்டத்தை சீரமைத்து சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வசதிகளை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில், "வள்ளுவர் கோட்டத்தின் அசல் கட்டமைப்பு மாறாமல் நவீன வசதிகளுடன் புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்படும். நூலகம், கலந்துரையாடல் வசதிகள், ஒலி - ஒளி காட்சி, உணவகம், பொதுமக்களுக்கான பிற வசதிகளுடன் கலையரங்கம் என நவீன முறையில் பொதுப்பணித்துறையால் புதுப்பிக்கப்படவுள்ளது." என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x