Published : 17 Sep 2017 08:38 AM
Last Updated : 17 Sep 2017 08:38 AM

தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு

வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தற்போது தமிழகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுநிலையோ, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியோ நிலவவில்லை. அதனால் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை வாய்ப்பு குறைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வெப்பச் சலனம் காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும்.

நேற்று காலை 8.30 மணிக்கு பதிவான மழை அளவின்படி, நீலகிரியில் 4 செமீ, திருபுவனத்தில் 3 செமீ, வால்பாறையில் 2 செமீ, சின்னகல்லாறு, ஆலங்காயத்தில் தலா 1 செமீ மழை பெய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x