Published : 31 Mar 2023 09:14 PM
Last Updated : 31 Mar 2023 09:14 PM

சென்ட்ரல், எழும்பூர், வடபழனி உள்ளிட்ட மேலும் 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் பாலூட்டும் அறைகள் திறப்பு

சென்னை: பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறைகள் இன்று (மார்ச் 31) புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ, வடபழனி மெட்ரோ, எழும்பூர் மெட்ரோ, புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையங்களில் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பாலூட்டும் தாய்மார்களின் வேண்டுகோளுக்கு இணங்க தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறை திறக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இந்த முயற்சி தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு பயண அனுபவத்தை மிகவும் இனிமையானதாக்கும்.

பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறைகளில் வசதியான இருக்கைகள், டயபர் மாற்றும் ஸ்லாப் மற்றும் மின்விசிறி போன்றவை கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளன. தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாலூட்டும் அறைகள் அடிக்கடி சுத்தம் செய்யப்படுகின்றன.

பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறைகள் இன்று (மார்ச் 31) புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ, வடபழனி மெட்ரோ, எழும்பூர் மெட்ரோ, புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையங்களில் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறைகள் ஏற்கெனவே விமான நிலைய மற்றும் விம்கோ நகர் மெட்ரோ நிலையத்தில் தாய்மார்களின் பயன்பாட்டிற்காக உள்ளது.

மெட்ரோ ரயில் பயணிகள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. பாலூட்டும் தாய்மார்கள் உட்பட அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x