ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு, கரிகாலன்
தமிழகம்
தஞ்சாவூர் | கைலியுடன் வர தடை விதித்த விஏஓ இடமாற்றம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் டி.எம்.கரிகாலன். ஓய்வுபெற்ற விமானப்படை வீரரான இவர், அலுவலகத்துக்கு வருபவர்கள் கைலி, கால் சட்டை, நைட்டி அணிந்து வரக்கூடாது என்ற அறிவிப்பை அலுவலகத்தின் முகப்பில் ஒட்டி வைத்திருந்தார்.
இதனிடையே, மகனுக்கு சாதி சான்று கேட்டு வந்த விவசாயி ஒருவர், கைலி அணிந்து இருந்ததால், அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படாமல் காக்க வைக்கப்பட்டார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில், கரிகாலன் மீது புகார்கள் வந்ததால் அவரை வேறு வருவாய்கோட்டத்துக்கு இடமாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும், அதுவரை தற்காலிகமாக பணியிலிருந்து விடுக்கப்பட்டுள்ளதாகவும் தஞ்சாவூர் கோட்டாட்சியர் (பொறுப்பு) பழனிவேல் கூறினார்.
