Published : 31 Mar 2023 06:07 AM
Last Updated : 31 Mar 2023 06:07 AM

புதுச்சேரி | மணக்குள விநாயகர் கோயிலில் விரைவில் பக்தர்களின் பார்வைக்காக லட்சுமி யானையின் தந்தம் வைக்கப்படும்

யானை லட்சுமியின் தந்தம், முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் மணக்குள விநாயகர் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலுக்கு 30.10.97-ல் ஐந்து வயதில் யானை லட்சுமியை வழங்கினர். கடந்த நவம்பர் 30-ம் தேதி நடைபயிற்சி சென்ற போது யானைலட்சுமி மயங்கி விழுந்து உயிரிழந்தது. பக்தர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் யானை லட்சுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதன் தந்தம் அப்புறப்படுத் தப்பட்டு வனத்துறையிடம் ஒப்ப டைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 4 மாதங் களுக்குப் பிறகு நேற்று யானை லட்சுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் லட்சுமி யானை, மாரடைப்பு காரணமாக உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப் பட்டிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து புதுச்சேரி வனத்துறை வசம் இருந்த லட்சுமியின் தந்தங்களை, முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் கோயில் நிர்வாகத்திடம் வனத்துறை காப்பாளர் வஞ்சுளவள்ளி நேற்று ஒப்படைத்தார். முதல்வரின் பரிந்துரையின் பேரில் பக்தர்களின் பார்வைக்காக விரைவில் யானை லட்சுமியின் தந்தம் கோயிலில் வைக்கப்படவுள்ளது என்று நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x