Published : 30 Mar 2023 03:33 PM
Last Updated : 30 Mar 2023 03:33 PM

66,130 ஊரக தூய்மைக் காவலர்களுக்கு மாத மதிப்பூதியம் ரூ.5,000 ஆக உயர்வு: தமிழக ஊரக வளர்ச்சித் துறையின் புதிய அறிவிப்புகள்

பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் ஐ பெரியசாமி

சென்னை: 66,130 ஊரகப் பகுதி தூய்மைக் காவலர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3,600-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 30) ஊரக வளர்ச்சித் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் விவரம்:

  • விளிம்பு நிலை மக்களின் குடியிருப்புகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1500 கோடி
  • ரூ.30 கோடி மதிப்பீட்டில் மலைப் பகுதிகளில் சிறப்புத் திட்டம்
  • ரூ. 69 கோடியில் ஊராட்சிகளுக்கான கட்டமைப்பு மற்றும் கழிவு மேலாண் வசதிகள் அருகிலுள்ள நகர்ப்புறங்களுடன் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தப்படும்
  • ரூ.70 கோடி மதிப்பீட்டில் ஊரகப் பகுதிகளில் 500 புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்படும்.
  • முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் 2,043 புதிய சத்துணவுக் கூடங்கள் ரூ.154 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • உள்ளூர் மயமாக்கல் மூலம் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கினை எய்திட ரூ.20 கோடியில் பயிற்சி
  • ரூ. 20.50 கோடியில் 224 புதிய வாகனங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலர்களுக்கு வழங்கப்படும்.
  • ரூ.1000 கோடியில் தனி நபர் மற்றும் சமுதாய சொத்துக்கள் உருவாக்கப்படும்.
  • ஊரகப் பகுதிகளில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் 10 லட்சம் வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.
  • பசுமை தமிழ்நாடு இயக்கத்தில் 70 லட்சம் மரக்கன்றுகள் ரூ.275 கோடி மதிப்பீட்டில் நடப்படும்.
  • ரூ.137 கோடியில் 10,50,000 சுய உதவிக் குழுக்களுக்கு 21 இலட்சம் முருங்கைக் கன்றுகள், ஊரகப் பகுதிகளில் இரத்த சோகையைக் குறைக்கும் பொருட்டு வழங்கப்படும்.
  • 66,130 ஊரகப் பகுதி தூய்மைக் காவலர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3,600-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x