Published : 30 Mar 2023 06:14 AM
Last Updated : 30 Mar 2023 06:14 AM
உடுமலை: மடத்துக்குளம் அருகே அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இயந்திரங்கள் பழுது நீக்கும் பணிகள்தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
உடுமலை, மடத்துக்குளம் அருகே கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. நடப்பாண்டு உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம், சூலூர்,பழநி, நெய்க்காரப்பட்டி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 2,780 ஏக்கர் கரும்பு விநியோகிக்கஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர பதிவு செய்யப்படாத கரும்புசுமார் 1,000 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மிகவும் பழமையான இயந்திரங்களை கொண்டு இயங்கும் அமராவதி சர்க்கரை ஆலை நடப்பாண்டு முறையாக இயங்குமா? கரும்பு கொள்முதல் செய்யப்படுமா? என்பது போன்ற பல குழப்பங்கள் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக ஆலை மேலாண் இயக்குநர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் கூறியதாவது: கடந்த ஆண்டுஇயந்திரக் கோளாறு ஏற்பட்டது உண்மைதான். ஆனாலும் ஒரு லட்சத்து ஆயிரம் டன் கரும்பு அரவைமேற்கொள்ளப்பட்டது. பிழிதிறனும்அதிகரித்தது. 62 ஆண்டுகளில் இல்லாத வகையில் ரூ.10 கோடிசெலவில் ஆலை புனரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
ஏப்ரல் 15-ம் தேதி வரைஇப்பணிகள் நடைபெறும். அதற்கடுத்த ஒருவாரம் வெள்ளோட்டம் நடைபெறும். ஏப்ரல் 21-ம் தேதி விவசாயிகளிடமிருந்து கரும்பு பெற்றுக் கொள்ளப்படும். உரிய நேரத்தில் வெட்டுவதற்கு ஆட்கள், வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உரிய நேரத்தில் பணப்பட்டுவாடா வரை அனைத்தும் சரியாகஇருக்கும். நடப்பாண்டு அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை மூடப்பட்டதால் அங்கிருந்து 10,000 டன் கரும்பு அரவைக்காக ஒப்பந்தமாகியுள்ளது. நடப்பாண்டு ஆலையில் ஒரு லட்சம் டன் கரும்பு அரவை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆலை உறுதியாக எவ்வித தடங்கலும் இன்றி இயங்கும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT