Published : 30 Mar 2023 07:15 AM
Last Updated : 30 Mar 2023 07:15 AM
சென்னை சென்ட்ரல்–பேசின் பாலம் நிலையங்கள் இடையே பாலம் கட்டுமானப் பணி நடக்க உள்ளதால், புறநகர் மின்சார ரயில் சேவை ஏப்.1-ம் தேதி முதல் ஏப்.25-ம்தேதி வரை மாற்றம் செய்யப்பட உள்ளது.
முழுமையாக ரத்து: மேற்கண்ட நாட்களில் மூர்மார்க்கெட் – பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இரவு 10.35 மணி ரயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் –ஆவடி இரவு 11.55 மணி ரயில் ஆகிய 2 மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.
பகுதி ரத்து: கும்மிடிப்பூண்டி – மூர்மார்க்கெட் அதிகாலை 4.50 மணி ரயில், சூலூர்பேட்டை – மூர்மார்க்கெட் அதிகாலை 5 மணி ரயில் ஆகியவை பேசின் பாலம்–மூர்மார்க்கெட் இடையே ரத்து செய்யப்படுகிறது.
மூர்மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி அதிகாலை 6.25 மணி ரயில்,மூர்மார்க்கெட் – சூலூர்பேட்டை காலை 7.30 மணி ரயில் ஆகியவை, மூர்மார்க்கெட்–பேசின் பாலம் இடையே ரத்து செய்யப்படுகிறது.
சூலூர்பேட்டை – மூர்மார்க்கெட் இரவு 8.45 மணி ரயில்,கொருக்குப்பேட்டை – மூர்மார்க்கெட் இடையே ரத்து செய்யப்படுகிறது. பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்– மூர்மார்க்கெட் இரவு 10.45 மணி ரயில், ஆவடி – மூர்மார்க்கெட் இடையே ரத்து செய்யப்படுகிறது. மூர்மார்க்கெட் –ஆவடி இரவு 11.30 மணி ரயில், மூர்மார்க்கெட்–வியாசர்பாடி இடையே ரத்து செய்யப்படுகிறது.
மாற்றுப் பாதையில் இயக்கம்: திருத்தணி – மூர்மார்க்கெட் இரவு8.45 மணி ரயில், அரக்கோணம் – மூர்மார்க்கெட் இரவு 9.45 மணிரயில், சூலூர்பேட்டை–மூர்மார்க்கெட் இரவு 9.40 மணி ரயில் ஆகியவை சென்னை கடற்கரை வழியாக திருப்பி விடப்படும். இந்த ரயில்கள் பேசின் பாலம், சென்னை சென்ட்ரல் செல்லாது.
இதுதவிர, மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்துஅரக்கோணம், கும்மிடிப்பூண்டிக்கு புறப்பட வேண்டிய 2 மின்சாரரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுபோல, மூர் மார்க்கெட்டில் இருந்து புறப்பட வேண்டிய சில ரயில்கள், சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT