

சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பெண்களுக்கென பிரத்யேகமாக இருக்கைகள் ஒதுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 29) போக்குவரத்துத் துறை மற்றும் இயக்கூர்திகள் சட்டங்கள் - நிர்வாகத் துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதில் பதில் அளித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் முக்கிய அறிவிப்புகளின் விவரம்:
இயக்கூர்திகள் சட்டங்கள்- நிருவாகம்