தமிழகத்தில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தராமல் 1,407 நிறுவனங்கள் விதிமீறல்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் 1,407 நிறுவனங்கள் பணியாளர்களுக்கு இருக்கை வசதி செய்துத் தராமல் அரசு விதியினை மீறி முரண்பாடுகளுடன் செயல்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் துணிக் கடைகள், நகைக் கடைகள், வணிக நிறுவனங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் இருக்கைகளில் அமர்ந்து பணியாற்றும் வகையில், 1947-ஆம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வாடிக்கையாளர் சேவையில் இல்லாத நேரத்தில் பணியிடத்துக்கு அருகில் அமருவதற்கு ஏதுவாக இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வில், 1,407 நிறுவனம் பணியாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தராமல் அரசு விதியினை மீறி முரண்பாடுகளுடன் செயல்பட்டது கண்டறியப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை தொழிலாளர் நலத்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் கடைகள், நிறுவனங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in