Published : 05 Sep 2017 09:42 AM
Last Updated : 05 Sep 2017 09:42 AM

ஜிஎஸ்டியை காரணம் காட்டி அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை: உங்கள் குரலில் வாசகர் புகார்

ஜிஎஸ்டியை காரணம் காட்டி அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வாசகர் ஒருவர் புகார் தெரி வித்துள்ளார்.

இதுதொடர்பாக மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் ‘உங்கள் குரல்’ வசதியை தொடர்புகொண்டு கூறியதாவது:

ஜிஎஸ்டியை காரணம் காட்டி டீயின் விலையை ரூ.8-லிருந்து ரூ.10 ஆக உயர்த்தியுள்ளனர். அதேபோல, இனிப்பு கடையில் காரத்தின் விலையை கிலோ ரூ.280-லிருந்து ரூ.300-ஆக உயர்த்தியுள்ளார்கள். ஆனால் பில்லில் ஜிஎஸ்டியோ, ஜிஎஸ்டி எண்ணோ குறிப்பிடவில்லை. ஜிஎஸ்டியை அமல்படுத்தும் அரசாங்கம் அவற்றை முறையாக வரன்முறைப் படுத்துவதிலும் அக்கறை காட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பொதுவாக பேக் செய்யப்பட்ட பொருளுக்கு அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (எம்ஆர்பி) குறிப்பிடுவது அவசியமாகும். அவ்வாறு எம்ஆர்பி விலை குறிப்பிட்டு அந்த விலைக்கு அதிகமாக பொருளை விற்றால் அதுகுறித்து புகார் தெரிவிக்கலாம். அதேபோல, ஜிஎஸ்டி-யை கார ணம் காட்டி ஒரு பொருளுக்கு விலை ஏற்றப்பட்டிருந்தால், அந்த பொருளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஜிஎஸ்டி வரி விதிக்காமல், பேக் செய்யப்பட்ட பொருளுக்கு அதிக விலை வைத்து விற்கக்கூடாது.

அதை மீறி அதிக விலைக்கு யாரேனும் பொருட்களை விற்றால் தொழிலாளர் நலத்துறையின் TN-LMCTS என்ற மொபைல் ஆப் மூலம் ஆதாரத்துடன் நுகர்வோர் புகார் தெரிவிக்கலாம். அதன்பிறகு, தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x