தமிழகத்தில் 5 நகரங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 5 நகரங்களில் வெயில் சதம்
Updated on
1 min read

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் இந்தியப் பகுதிகளின் மேல், வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக மார்ச் 28-ம் தேதி (இன்று) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி வேலூர், நாமக்கல், மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் 38 டிகிரி செல்சியஸ் (100 டிகிரி ஃபாரன்ஹீட்), ஈரோட்டில் 38.8 டிகிரி செல்சியஸ் (102 டிகிரி ஃபாரன்ஹீட்) வெயில் பதிவாகியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in