சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பி.வடமலை பொறுப்பேற்பு

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி பி.வடமலை
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி பி.வடமலை
Updated on
1 min read

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பி.வடமலை பொறுப்பேற்றார். அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மாவட்ட நீதிபதியாக இருந்த பி.வடமலையை, சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமித்து கடந்த 23-ம் தேதி குடியரசுத்தலைவர் உத்தரவு பிறப்பித்தார். இதன்படி, அதற்கான பதவியேற்பு நிகழ்ச்சி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் நீதிபதியாக பொறுப்பேற்ற நீதிபதி வடமலைக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கூடுதல் நீதிபதி நியமனத்தைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்தது. சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நீதிபதி இடங்களின் எண்ணிக்கை 75 ஆகும்.

நீதிபதி பி.வடமலையை வரவேற்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் கமலநாதன், LAW அசோசியேசன் தலைவர் செங்குட்டுவன் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் லுயிசால் ரமேஷ் ஆகியோர் வரவேற்று பேசினர். இதனையடுத்து ஏற்புரை வழங்கிய நீதிபதி பி.வடமலை, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in