

சென்னை அமிர்தா சர்வதேச ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் படிக்கும் மாணவர் கள் அடுத்த கல்வி ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் உள்ள ஷெப்பீல்ட் (Sheffiled) கல்லூரி யில் ஓராண்டு படிப்பதற்கான வாய்ப்பை பெறுகின்றனர். இந்த திட்டம் சென்னை ஜி.ஆர்.டி. ஹோட்டலில் செவ்வாய்க் கிழமை தொடங்கிவைக்கப் பட்டது. இது குறித்து சென்னை அமிர்தா கல்லூரியின் தலைமை நிர்வாக அலுவலர் ஆர்.பூமிநாதன் கூறியதாவது:
தற்போது, சென்னை அமிர்தா கல்லூரியில் படிக்கும் மாணவர் கள் 2 ஆண்டுகள் சென்னையிலும் ஓர் ஆண்டு மலேசியாவில் உள்ள தர்ஷல் அகாடமியிலும் பயில் கின்றனர். அடுத்த ஆண்டு முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட 300 மாண வர்கள் சென்னை, மலேசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் தலா ஓர் ஆண்டு பயிற்சி பெறுவார்கள். இதனால் மாணவர்களுக்கு பல உணவு வகைகள், மொழி, கலாச்சாரத்தை அறிந்துகொள்ள முடியும். மாணவர்கள் படிக்கும்போதே கல்வி ஊக்கத் தொகையும் பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஆஸ்திரே லிய வர்த்தக ஆணையர் மைக் கேல் கார்டர், ஷெப்பீல்ட் கல்லூரி யின் தலைமை நிர்வாக அலுவலர் தல்ஜித் மோங்கா, மலேசியா தர்ஷல் அகாடமியின் நிர்வாக இயக்குநர் எஸ்.கே.கலையரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.