Published : 27 Mar 2023 07:12 AM
Last Updated : 27 Mar 2023 07:12 AM

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் | தமிழக அரசு - ஆளுநர் இடையிலான சட்டப் போராட்டம்: ஆளுநர் தமிழிசை கருத்து

திருச்சி: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்தமிழக அரசுக்கும் ஆளுநருக்குமான சட்டப் போராட்டம். அதில்நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என தெலங்கானா மாநிலஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தர்ராஜன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

புதுச்சேரி மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, பல நல்ல திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த மாநிலத்திலும் எரிவாயுக்கு மானியம் வழங்கப்படுகிறது. மத்திய அரசும் தனது பங்காக உஜ்வாலா திட்டத்தில் வழங்கப்பட்டு வரும் மானியத்தை ரூ.200 என உயர்த்தியுள்ளது.

பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கூறியதைபோல, புதுச்சேரியை சிறந்த மாநிலமாக கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தமிழக அரசுக்கும், ஆளுநருக்குமான சட்டப் போராட்டம். அதில்நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. இலங்கை கடற்படை சார்பில் கச்சத்தீவில் புத்தர் சிலைஅமைக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களால் பிரச்சினைகளை கொண்டு வரக்கூடாது என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x