கலாஷேத்ரா கல்லூரி விவகாரம்: விசாரணை நடத்த டிஜிபி உத்தரவு

கலாஷேத்ரா கல்லூரி விவகாரம்: விசாரணை நடத்த டிஜிபி உத்தரவு
Updated on
1 min read

சென்னை: திருவான்மியூர் கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு, ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக அக்கல்லூரியின் முன்னாள் இயக்குநர், சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை அளிக்குமாறு தமிழக டிஜிபிக்கு, தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, புகார் குறித்து விசாரணை நடத்து மாறு சென்னை காவல் ஆணையருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக கூறப்பட்ட 24 வயது மாணவி ஒருவர், தனது பெயரையும், கல்லூரியின் பெயரையும் கெடுப்பதற்காக, வேண்டுமென்றே தவறானதகவல் பரப்பப்பட்டு உள்ளதாகவும், இதை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன் பேரில், அடையாறு அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in