விழுப்புரம் | அன்பு ஜோதி ஆசிரம முறைகேடுகள்: தேசியமனித உரிமை ஆணைய முதற்கட்ட விசாரணை நிறைவு

விழுப்புரம் | அன்பு ஜோதி ஆசிரம முறைகேடுகள்: தேசியமனித உரிமை ஆணைய முதற்கட்ட விசாரணை நிறைவு
Updated on
1 min read

விழுப்புரம்: விழுப்புரம் அருகே குண்டலபுலியூ ரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த மாதம் 10-ம் தேதி காவல்துறையினர் வருவாய் துறையினருடன் இணைந்து நடத்திய விசாரணையில், ஆசிரமத்தில் தங்கியிருந்த மனநலம் குன்றியோர் ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை அடித்து துன்புறுத் தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட குற்றங்கள் நடந்திருப்பது வெளி வரத் தொடங்கின.

மேலும், இந்த ஆசிரமத்தில் இருந்த நூற்றுக்கணக்கானோரில் 20 பேர் காணாமல் போயிருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம பணியாளர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப் பட்டு, அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தேசிய மகளிர் ஆணையம், தேசியகுழந்தைகள் நல ஆணையம், மாநில மகளிர் ஆணையம் உள்ளிட்டவைகள் அன்பு ஜோதி ஆசிரமத்தின் முறை கேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளன.

இந்நிலையில் கடந்த 21-ம்தேதி முதல் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற் கொண்டது. இந்த ஆணையத்தின் புலனாய்வு பிரிவு முதுநிலை கண் காணிப்பாளர் பாட்டீல் கேத்தன் பாலிராம் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர், அன்பு ஜோதிஆசிரமத்தில் இருந்து மீட்கப் பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 பெண் கள் உட்பட 20 பேரிடமும் தனித் தனியாக விசாரணை நடத்தினர்.

பின்னர், இவ்வழக்கை புலன் விசாரணை செய்து வரும் விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் கண்காணிப் பாளர் கோமதி தலைமையிலான போலீஸாரிடம் இவ்வழக்கில் இதுவரை கிடைத்துள்ள ஆதாரங் கள், குற்றப்பதிவுகள் குறித்து விசாரணை நடத்தினர்.

இதனை தொடர்ந்து 22-ம் தேதி அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப் போது தும்பூரைச் சேர்ந்த நாக ராஜ் என்பவர் சற்றே மனநலம் பாதிக்கப்பட்ட தன் மனைவி தேவியை அன்பு ஜோதி ஆசிரத்தில் சேர்த்ததாகவும், தற் போது காணவில்லை என இக் குழுவினரிடம் தெரிவித்தார். பின்னர் அவர் கெடார் போலீஸில் முறைப்படி புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து இக்கு ழுவினர் மாற்றுத்திறனாளி அலு வலர் மற்றும் குழந்தைகள் பாது காப்பு அலுவலகம் மற்றும் பெண்கள் காப்பகத்தினரிடம் விசாரணை மேற்கொண்டபின் நேற்று புறப்பட்டு சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in