ராகுல் தகுதி நீக்கம் | “காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் அவசர நிலை...” - தமிழக பாஜக

நாராயணன் திருப்பதி | கோப்புப்படம்
நாராயணன் திருப்பதி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: "காங்கிரஸ் இன்று ஆட்சியில் இருந்திருந்தால், 1975-ம் ஆண்டு இதேபோன்று இந்திரா காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவசர நிலையை கொண்டு வந்தது போல் கொண்டு வந்திருக்கும்.பாஜக ஆட்சியில் இருப்பதால் நாடும், நாட்டு மக்களும் நெருக்கடி நிலை பயங்கரத்தில் அவதியுறவில்லை" என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ராகுல் காந்தியை தண்டித்ததன் மூலம் சட்டம் தன் கடமையை செய்துள்ளது. ராகுல் காந்தியை பாராளுமன்ற உறுப்பினராக தகுதி நீக்கம் செய்தது 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என்ற உண்மையை உணர்த்தியுள்ளது.

காங்கிரஸ் இன்று ஆட்சியில் இருந்திருந்தால், 1975ம் ஆண்டு இதேபோன்று இந்திரா காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவசர நிலையை கொண்டு வந்தது போல் கொண்டு வந்திருக்கும். பாஜக ஆட்சியில் இருப்பதால் நாடும், நாட்டு மக்களும் நெருக்கடி நிலை பயங்கரத்தில் அவதியுறவில்லை" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, குற்றவியல் வழக்கில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெறுபவர்கள் மக்கள் பிரதிநிதியாக தொடர முடியாது எனும் சட்டத்தின் கீழ், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in