

சென்னை: எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பாசிஸ்ட்டுகளை அச்சமூட்டியுள்ளதாக, தமிழக அமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராகுல் தகுதி நீக்கம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தேர்தல் பேச்சு தொடர்பாக பாஜகவினர் தொடர்ந்த அவதூறு வழக்கில், காங்கிரஸின் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறையென தீர்ப்பு வந்ததும்,அவரை எம்பி பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்துள்ள மத்திய பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பாசிஸ்ட்டுகளை அச்சமூட்டியுள்ளது" என்று அதில் கூறியுள்ளார்.