Published : 24 Mar 2023 06:05 AM
Last Updated : 24 Mar 2023 06:05 AM
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலையில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்து போன்ற விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், கே.எஸ்.அழகிரி, இரா.முத்தரசன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்னர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் உள்ள பட்டாசு கிடங்கில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 18 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்ப தாவது:
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: பட்டாசுத் தொழிற்சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும், நிவாரணம் அளிப்பதும், பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவதும் வாடிக்கையாகிவிட்டது. இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கதொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அதிகாரிகளோடு ஒரு விரிவான ஆய்வுக்கூட்டத்தை நடத்தி, இனி வருங்காலங்களில் காலமுறை ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யவும், பாதுகாப்புப் பணிகளை வலுப்படுத்தவும், காலி பணியிடங்கள் இருப்பின் அவற்றை நிரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: குருவிமலை பட்டாசு ஆலை விபத்தில் 9 பேர்உயிரிழந்திருப்பது வேதனைஅளிக்கிறது. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறியதன் விளைவாக இத்தகைய விபத்துகள் ஏற்படுகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவிகள் செய்யும் அதேநேரத்தில், இத்தகைய வெடி விபத்துகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க அனைத்து பாதுகாப்பு விதிகளையும் உடனடியாக உறுதி செய்ய நடவடிக்கை களை எடுக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க ஆபத்தான தொழில்களில் தொழில் கட்டமைப்பு, விபத்துத் தடுப்பு சாதனங்கள், பயிற்சி பெற்ற திறன்பெற்ற தொழிலாளர்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். தற்போது பட்டாசு ஆலை விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு, உதவியும் மறுவாழ்வு ஏற்பாடு களும் செய்துதர வேண்டும். பாதுகாப்பு குறைபாடுகளுக்கு காரண மானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா: காஞ்சிபுரத்தில் நடந்த சம்பவத்தை போன்று எதிர்பாராமல் நடக்கும்சம்பவங்களில் ஏற்படும் உயிரிழப் புகள் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. இந்த சம்பவத்தை காரண மாக வைத்து வணிகர்களை துறைசார்ந்த அதிகாரிகள் ஆய்வுகள் என்ற பெயரில் அச்சுறுத்தக் கூடாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT