

காஞ்சிபுரம் நகரில் ஆட்டோக் களை சோதனையிடும்போது, அதில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்க ஆட்டோக் களுக்கு தனி எண் வழங்கும் புதிய திட்டத்தை காஞ்சிபுரம் காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகப் புகழ்பெற்ற கோயில் களை பார்க்கவும், பாரம்பரிய பட்டுப் புடவைகளை வாங்கவும், தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் காஞ்சிபுரம் வருகின்றனர். அப்போது சுற்றுலாப் பயணிகள் செல்லும் ஆட்டோக்களின் ஆவணங்களை சோதனையிடும்போது, சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதை தவிர்க்க, காஞ்சிபுரம் நகரத்தில் இயங்கும் ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களுக்கு தனி எண் வழங்கும் திட்டத்தை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தை வடிவமைத்து, செயல்படுத்திவரும் காஞ்சிபுரம் சிவகாஞ்சி காவல்நிலைய ஆய்வாளர் எஸ்.பிரபாகர் கூறிய தாவது: காஞ்சிபுரத்தில் 2 ஆயிரத் துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. அவற்றின் ஆவணங்களை சரிபார்த்து விதிமீறல் இல்லாமல் பார்த்துக் கொள்ளும்போது ஆட்டோவில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிக ளுக்கு இடை யூறு ஏற்படக்கூடாது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் ஆட்டோக் களுக்கு தனி எண் வழங்க முடிவு செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் மற்றும் ஓட்டு நரின் விவரங்களைப் பெற்றுக் கொண்டு வழங்கப்படும் தனி எண் ஆட்டோக்களை மடக்கி, ஆவணங்களை சரிபார்க்கும் வேலை போலீஸாருக்கு மிச்சமா கிறது.
இதனால் ஆட்டோக்களில் பயணிக்கும் சுற்றுலாப் பயணி களுக்கும் இடையூறு ஏற்படாது. உரிய ஆவணங்கள் இன்றி ஆட்டோ ஓட்டுவது முற்றிலும் தடுக் கப்படும்.
வெளியூரில் இருந்து காஞ்சி புரத்துக்கு வரும் ஆட்டோக்களை யும், வெளியூர் ஆட்டோக்களில் வந்து குற்றச் செயல்களில் ஈடுபடு வோரையும் எளிதில் அடையாளம் காணமுடியும். ஆட்டோ ஓட்டுநர்கள் குறித்து சுற்றுலாப் பயணிகள் புகார் தெரிவிக்கவும் தனி எண் பயன்படும்.
இத்திட்டம் குறித்து, காஞ்சி புரம் காவல் துணை கண் காணிப்பாளர் ப.பாலசந்திரன் மூலமாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜய குமாரை சந்தித்து விளக்கினேன். இத்திட்டத்தை அவர் பாராட்டி, நகரம் முழுவதும் எனது பொறுப் பிலேயே திட்டத்தை செயல்படுத் துமாறு அறிவுறுத்தினார்.
அதன்படி, தனி எண் குறித்து, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தனி எண்ணை பெற்று, ஆட்டோ நிறுத்தம் உள்ள காவல்நிலைய எல்லை குறித்த விவரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, 8 அங்குலம் விட்ட அளவில் ஆட்டோக்களின் முன் மற்றும் பின்புறம் எளிதில் பார்வையில் படும்படியாக ஒட்ட வேண்டும் என்று அவர்களை அறிவுறுத்தினேன்.
நகரத்தில் இயக்கப்படும் 2 ஆயிரம் ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களில் 1750 ஆட்டோக்கள், எங்களிடம் ஆவணங்களைக் கொடுத்து பதிவு செய்து கொண்டுள்ளன. மேலும் 250 ஆட்டோக்களை பதிவு செய்யும் பணி நடை பெற்று வருகிறது.
ஆட்டோ ஓட்டுநர்கள், தனி எண்ணுக்காக காவல்நிலையத் துக்கு வந்து செல்வதன் மூலம், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் காவல்துறையினரிடையே இணக்கமான சூழல் ஏற்படுகிறது என்றார் அவர்.