சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதி நியமனம்: மத்திய அரசு 

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஒரு கூடுதல் நீதிபதியை நியமித்தும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலிருந்து இரண்டு நீதிபதிகளை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்தும் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், மாவட்ட நீதிபதியாக உள்ள பி.வடமலையை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆந்திரா உயர் நீதிமன்ற நீதிபதி பட்டு தேவ்ஆனந்த், மற்றும் தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி தேவராஜூ நாகார்ஜூன் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக இடமாற்றம் செய்தும் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61ஆக உயரவுள்ளது. அதேநேரம் நீதிபதிகளுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 14 ஆக குறையும். நீதிபதிகள் மூன்று பேரும் விரைவில் பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in