ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றம்: டிடிவி தினகரன் வரவேற்பு

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றம்: டிடிவி தினகரன் வரவேற்பு
Updated on
1 min read

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான தடை சட்ட மசோதா மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டிருப்பதை வரவேற்கின்றேன் என தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: ''ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான தடை சட்ட மசோதா மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டிருப்பதை வரவேற்கின்றேன்.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான தடை சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள நிலையில் இந்த மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தமிழ்நாட்டில் பலர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் மக்களின் உயிர் பிரச்னையாக கருதப்படும் இந்த மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.'' இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in