Published : 23 Mar 2023 06:14 AM
Last Updated : 23 Mar 2023 06:14 AM

சென்னை மாநகராட்சி பொது இடங்களில் கழிவு கொட்டியவர்களுக்கு அபராதம்

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை பெருநகர மாநகராட்சியை தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவு கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, கடந்த மார்ச் 3 முதல் 16-ம் தேதி வரை பொதுஇடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு ரூ.10.78 லட்சம் அபராதம்,கட்டுமானக் கழிவு கொட்டியவர்களுக்கு ரூ.8.80 லட்சம், அரசு, மாநகராட்சி கட்டிடங்கள், பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டிய 805 பேருக்கு ரூ.1.62 லட்சம் என மொத்தம் மொத்தம் ரூ.21 லட்சத்து 19 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு்ளது.

எனவே, பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் குப்பை, கட்டுமானக் கழிவு கொட்டுதல், பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். பொது இடங்கள் மற்றும் காலிமனைகளில் அதிக குப்பை காணப்பட்டால், மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x