Published : 20 Jul 2017 08:45 AM
Last Updated : 20 Jul 2017 08:45 AM

கமல்ஹாசனுக்கு திடீரென ஞானோதயம் வருவது ஏன்? - தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

‘ரஜினிகாந்தைப் போல கமல் ஹாசன் இதுவரை சமூகக் கருத்துகளை வெளிப்படுத்தியது இல்லை. அப்படியிருக்கும்போது திடீரென ஞானோதயம் வருவது ஏன்?’ என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: மாணவி வளர்மதி கைது விவகாரத்தில், பாஜக ஆதரவாக வும் இல்லை, எதிராகவும் இல்லை. நடிகர் கமல்ஹாசனின் திரைப் படங்களை மக்கள் பணம் கொடுத்து தான் பார்க்கின்றனர். மக்களுக்கான தலைவர்கள் அரசியலிலேயே இருக்கின்றனர். திரைத்துறையில் இருந்தாலும் ரஜினிகாந்த் போல சமூகக் கருத்துகளை கமல்ஹாசன் இதுவரை வெளிப்படுத்தியது இல்லை. எந்த சேவையும் செய் யாமல் இருந்த அவருக்கு திடீரென ஞானோதயம் வருவது ஏன்? அர சியல் களத்தில் செயலாற்றுவதே அரசியல். தவிர டிவிட்டரில் செயல்படுவது அல்ல.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி யில் சிறைத்துறையில் ஊழல் நிறைந்திருப்பது வெளிப்பட்டு உள்ளது. இதுகுறித்த விசாரணை நடத்த முதல்வர் சித்தராமையா நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவை உறுப் பினர்கள் தங்களுக்கான சம் பளத்தை உயர்த்தி கொள்வது சரிதானா? இது குறித்து எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பாதது ஏன்? என்று அவர் கூறினார்.

ரஜினியோடு ஒப்பிட முடியாது

முன்னதாக, சேலத்தில் பாஜக பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் நினைவு நாள் அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், ‘நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1996-ம் ஆண்டு ஊழலுக்கு எதிராகவும், நதி நீர் பிரச்சினை குறித்தும் சமுதாய நோக்கோடு பேசினார். அவருடன் கமலஹாசனை ஒப்பிட முடியாது’ என்றார்.

ஹெச்.ராஜா விமர்சனம்

அந்த கூட்டத்தில் பங்கேற்ற பாஜ தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியபோது, ‘அரசு மீது யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்ய உரிமை உள்ளது. ‘விஸ்வ ரூபம்’ படத்தை எதிர்த்து பல அமைப்புகள் போராட்டம் நடத்திய போது நாட்டை விட்டே செல்கிறேன் என்றவர் முதல்வரானால், தமிழ் நாட்டை விட்டுச் சென்று விடுவார். தமிழ்நாட்டின் கதி என்னாவது. முதுகெலும்பு இல்லாத கமல், ஒரு போதும் முதல்வராக முடியாது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x