Published : 22 Mar 2023 06:04 AM
Last Updated : 22 Mar 2023 06:04 AM

புதுச்சேரி | அலுவலகத்துக்கு சரியான நேரத்துக்கு வராத 26 ஊழியர்களுக்கு விடுப்பு: உரிய நேரத்தில் வராவிட்டால் பணியிடமாற்றம்

புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்து தாமதமாக வந்தோர் விவரங்களை கேட்டறியும் ஆட்சியர் மணிகண்டன். படம்: செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி அலுவலகத் திற்கு சரியான நேரத்தில் பணிக்கு வராத 26 ஊழியர்களுக்கு விடுப்பு அளித்து மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் உத்தரவிட்டார். தாமதமாக வருவோருக்கு முக்கியப் பொறுப்பு தரக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ள ஆட்சியர், உரிய நேரத்தில் வராதோரை பணியிடமாற்றம் தரவும் முடிவு எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் உள்ள அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை என மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பலர் புகார் தெரிவித்தனர். இப்புகாரை அடுத்து மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து வரு கிறார்.

இந்நிலையில், புதுச்சேரி நகராட்சி அலுவலகத்திற்கு நேற்று காலை ஆட்சியர் மணிகண்டன் ஆய்வுக்கு சென்றார். அங்கு ஊழியர்கள் வருகை பதிவேட்டை எடுத்து பார்த்தபோது, 50 சதவீதம் ஊழியர்கள் சரியான நேரத்திற்கு வராதது தெரிய வந்தது. அதாவது 50 பேரில் 26 பேர் பணிக்கு வரவில்லை.

“மக்களின் நேரடி தொடர்பில் இருக்கும் ஊழியர்கள் காலத்தோடுபணிக்கு வராதது கண்டிக்கத்தக்கது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நகராட்சி ஆணையருக்கு ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

இதனைத்தொடர்ந்து அங்கு இருந்த அதிகாரிகளிடம் இனி வரும் அதிகாரிகள் வருகை பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்கக் கூடாது. மேலும் உரிய நேரத்தில் பணிக்கு வராத ஊழியர்களுக்கு இன்று (நேற்றைய தினம்) கட்டாய விடுப்பு அளித்து, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

கண்காணிப்பாளரை மாற்ற உத்தரவு: இதனைத் தொடர்ந்து ஏற் கெனவே ஆய்வுக்கு சென்று நடவடிக்கை எடுத்த கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை இயக்குநர் அலுவ லகத்திற்கு நேற்று மீண்டும் ஆய்வுக்கு சென்றார். அந்த அலுவலகத்தில் சரியான நேரத்தில் பணிக்கு வராத கண்காணிப்பாளருக்கு விடுப்பு அளித்து வேறு துறைக்கு மாற்ற உத்தரவிட்டார். அதேநேரத்தில் பல ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வந்திருந்தனர்.

அதைத்தொடர்ந்து ஆட்சியர் கூறுகையில், "மக்கள் சேவையில் பணியாற்றும் அதிகாரிகள் உரிய நேரத்தில் பணிக்கு வரவில்லை என்றால் அவர்களை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று துறை தலைவருக்கு அறிவுறுத்தப்படும். இந்த நடவடிக்கைமாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் பொருந்தும்.

பாரபட்சமில்லாத நடவடிக்கை எடுக்கப்படும்.பணிக்கு நேரத்தோடு வராதவர்களுக்கு இனி முக்கிய பொறுப்பு வழங்க கூடாது என கடிதம் அனுப்பப்படும்" என்று குறிப்பிட்டார். பணிக்கு நேரத்தோடு வராதவர்களுக்கு இனி முக்கிய பொறுப்பு வழங்க கூடாது என கடிதம் அனுப்பப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x