Published : 12 Sep 2017 11:02 AM
Last Updated : 12 Sep 2017 11:02 AM

இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகும் அதிமுக பொதுக்குழு கூட்டம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் இன்று (செப்டம்பர் 12) நடைபெற்றுவரும் நிலையில் இந்திய அளவில் ட்விட்டரில் அதிமுக பொதுக்குழு கூட்டம் #AiadmkGeneralCouncil என்ற ஹேஷ்டேக் கீழ் ட்ரெண்டாகி வருகிறது.

இந்தக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்குவது தொடர்பான தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று (செப்.11) இரவு 9 மணிவரை அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கப்படுமா என்ற சந்தேகம் நிலவியது. இந்நிலையில் இன்று கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இருப்பினும், அதிமுக விவகாரம் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருப்பதால் பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்கள் கட்சியை கட்டுப்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x