ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் ஓலைச்சுவடிகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் ஓலைச்சுவடிகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
Updated on
1 min read

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ள ஓலைச்சுவடிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது. மதுரை வைகை கரை பேச்சி யம்மன் படித்துறையில் 1915-ம் ஆண்டு தேவஸ்தான பாடசாலை தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இது சமஸ்கிருதக் கல்லூரியாக இருந்தது. பின்னர், 1924-ம் ஆண்டு தமிழில் வித்துவான் பிரிவும் தொடங்கப்பட்டது.

1965-ம் ஆண்டு இந்த பாடசாலை மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு மாற்றப்பட்டது. இந்த பாட சாலையில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட நூல்களும், பழமையான ஓலைச்சுவடிகள் கொண்ட நூலகமும் இயங்கி வந்தது. 1980-களில் பாடசாலையை மூடிய பிறகு நூலகம் மட்டும் இயங்கி வந்தது.

நூலகமும் மூடப்பட்ட பின்னர் அங்கிருந்த பழமையான ஓலைச்சு வடிகள் ராமநாத சுவாமி கோயில் பதிவறைகளில் இருந்த மற்ற ஓலைச்சுவடிகளுடன் பத்திரப் படுத்தப்பட்டன.

இந்நிலையில் ராமநாத சுவாமி கோயிலில் உள்ள ஓலைச் சுவடிகளை கணக் கெடுக்கும் பணி தொடங்கப்பட்டது.

தமிழ், கிரந்தம், தெலுங்கு மற்றும் பழமையான மொழிகளில் உள்ள இந்த ஓலைச்சுவடிகளை படித்து அதிலுள்ள தரவுகளை டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்த வேண் டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in