தூத்துக்குடி | கைதான இலங்கை மீனவர்களிடம் உளவு பிரிவு போலீஸார் விசாரணை

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 6 பேரையும், இந்திய கடலோர காவல் படையினர், தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் ஒப்படைத்தனர். படம்: என்.ராஜேஷ்
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 6 பேரையும், இந்திய கடலோர காவல் படையினர், தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் ஒப்படைத்தனர். படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

தூத்துக்குடி: இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரைதூத்துக்குடியைச் சேர்ந்த இந்திய கடலோர காவல் படையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான மீனவர்கள் முகமது ரசார், நுவான், பிரகீத், ரூவான், மதுரங், அப்துர் ரகுமான் ஆகியோர் நேற்று மாலை 3 மணியளவில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து படகுமூலம் மாலை 4.30 மணியளவில் தருவைகுளம் கடற்கரை பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் தருவைகுளம் கடலோர காவல்நிலையத்தில் வைத்து 6 மீனவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கியூ, ஐபிஉள்ளிட்ட மத்திய, மாநில உளவு பிரிவு போலீஸாரும் இலங்கை மீனவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் ராமநாதபுரத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அவர்களை அடைக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in