உயிரிழந்த தந்தை உடல் முன் திருமணம் செய்துகொண்ட மகன் - கள்ளக்குறிச்சி அருகே உருக்கம்

உயிரிழந்த தந்தை உடல் முன் திருமணம் செய்துகொண்ட மகன் - கள்ளக்குறிச்சி அருகே உருக்கம்
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே திருமணத்திற்கு முன்னரே தந்தை உயிரிழந்தால், அவரது உடல் முன்பு திருமணம் செய்து கொண்ட மகனின் செயல் உருக்கமாக அமைந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் அய்யம்மாள். இவரது கணவர் ராஜேந்திரன். இவர்களது மகன் பிரவீன் என்பவருக்கு வரும் 27-ம் தேதி அன்று திருமணம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் உடல் நலக்குறைவால் ராஜேந்திரன் நேற்று (20-03-23) உயிரிழந்தார். இந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மகன் பிரவீன் திருமணம் செய்யவிருக்கும் மணப்பெண் சென்னையைச் சேர்ந்த சொர்ணமால்யா இறப்பு நிகழ்ச்சிக்கு வந்தபோது, தனது தந்தையின் ஆசிர்வாதத்துடன் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியதன் அடிப்படையில், உடனடியாக இரண்டு நபர்களும் திருமண கோலத்தில் தோன்றி உயிரிழந்த ராஜேந்திரன் முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

உற்றார் உறவினர் புடைசூழ மகிழ்ச்சியோடு நடைபெறவேண்டிய திருமணம், திடீர் திருமணமாக உற்றார்‌ உறவினர் சூழ சோகத்தோடு நடைபெற்றது கிராம மக்களிடையே பெரும் உருக்கத்தை ஏற்படுத்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in