

சேலம்: அனைத்து கிராம கோயில்களுக்கு கட்டணமில்லா மின்சாரம் வழங்க வலியுறுத்தி சங்கு ஊதி, மணி அடித்து பூசாரிகள் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து கிராம கோயில்களுக்கும் கட்டணமில்லா மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத் மற்றும் தமிழ்நாடு கிராம கோயில் பூசாரிகள் பேரவை சார்பில் சங்கு ஊதி, மணி அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் மற்றும் கிராம கோயில் பூசாரிகள் பேரவை சார்பில் சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே கோரிக்கை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்டத் தலைவர் அருள்ஜி தலைமை வகித்தார். கிராம கோயில் பூசாரிகள் பேரவையின் மாநில இணை அமைப்பாளர் சிவ மகேந்திரன், மண்டல அமைப்பாளர் பிரகாஷ் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தனர். தமிழகத்தில் செயல்படாமல் முடங்கி கிடக்கும் கிராம கோயில்கள் பூசாரிகள் நல வாரியத்தை உடனடியாக சீர்படுத்தி செயல்படுத்த வேண்டும். அனைத்து கிராம கோயில்களுக்கும் கட்டணமில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.
ஓய்வூதியும் பெறும் பூசாரிகள் இறப்புக்கு பிறகு அவரது மனைவிக்கு அந்த தொகை வழங்கப்பட வேண்டும். இந்து கோயில்களை இடிப்பதை தவிர்க்க வேண்டும். அனைவருக்கும் சமமான சலுகைகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்கு ஊதி, மணி அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராம கோயில் பூசாரிகள் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.