சென்னை - அரக்கோணம் மின் ரயில்கள்: சோளிங்கர் வரை நீட்டிக்க பயணிகள் கோரிக்கை

சென்னை - அரக்கோணம் மின் ரயில்கள்: சோளிங்கர் வரை நீட்டிக்க பயணிகள் கோரிக்கை

Published on

சென்னை: சென்னையில் இருந்து அரக்கோணம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்களை சோளிங்கர் வரைநீட்டிக்க வேண்டும் என்று பயணிகள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரக்கோணம் அடுத்துள்ள சோளிங்கரில் புகழ் பெற்ற நரசிம்மர் கோயிலும், இதன் அருகிலேயே, ஆஞ்சநேயர் கோயிலும் இருக்கின்றன. இங்கு, தினமும்ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சோளிங்கரில் போதிய ரயில் வசதி இல்லாததால், பயணிகள் அரக்கோணம் சென்று பயணம் செய்ய வேண்டியநிலை உள்ளது. எனவே, சென்னையில் இருந்து அரக்கோணத்துக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களை சோளிங்கர் வரையில் நீட்டித்து இயக்க வேண்டும் என்று தெற்குரயில்வேயின் சென்னை கோட்டத்துக்கு ரயில் பயணிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ``அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரயில் சோளிங்கர் வரையில் நீட்டிப்பதற்கான போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. இருப்பினும், அந்த வழியாக பயணிகள் ரயில்கள் இயக்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்'' என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in