Published : 07 Sep 2017 06:47 PM
Last Updated : 07 Sep 2017 06:47 PM

சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட காவலர் உயிரிழப்பு

கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் வசித்து வந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

சென்னை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தவர் பாலாஜி (26), இவருக்கு திருமணமாகி இரண்டு மாதம் ஆகியுள்ளது. சென்னை கொண்டித்தோப்பில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

சமீபத்தில் கடுமையான காய்ச்சல் காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சோதனையில் இவருக்கு டெங்கு ஜுரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பாலாஜிக்கு நோயின் பாதிப்பு அதிகரித்து வந்த வேளையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மரணமடைந்தார்.

பாலாஜி வசிக்கும் கொண்டித்தோப்பு குடியிருப்பில் சுகதார சீர்க்கேடு களையப்பட வேண்டும் என காவலர்கள் தரப்பில் பலநாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள பழைய வாகனங்கள், தொட்டிகள், குப்பை பொருட்களை அகற்ற வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ள நிலையில் காவலர் பாலாஜி மரணம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x