ஸ்டாலின் முதல்வராக இருப்பதற்கு நான்தான் காரணம்: சீமான்

ஸ்டாலின் முதல்வராக இருப்பதற்கு நான்தான் காரணம்: சீமான்
Updated on
1 min read

சென்னை: மு.க.ஸ்டாலின் முதல்வராக இருப்பதற்கு நான் தான் காரணமென நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: நான் தேர்தலில் வாக்குகளை பிரிக்க வந்த ஆள் என்கின்றனர். நான் வாக்குகளை பிரிக்கிறேன் என்றால் திமுக பலவீனமாக உள்ளது என்பதை ஒத்துக்கொள்வார்களா?

நான் இல்லை என்றால் திமுக இன்றைக்கு ஆட்சியில் அமர்ந்திருக்காது. தேர்தலின் போது 37 இடங்களில் அதிமுக வெறும் 400, 500 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அவ்விடங்களில் நான் 18 ஆயிரம், 20 ஆயிரம் வாக்குகளை பெற்றிருக்கிறேன். அப்படியானால் இன்று மு.க.ஸ்டாலின் முதல்வராக இருப்பதற்கு நான் தான் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in