கள்ளக்குறிச்சி | சித்தப்பட்டிணம் ஊராட்சியில் 6 மாதமாக ஊதியம் பெறாத தூய்மைக் காவலர்கள்

சித்தப்பட்டிணத்தில் பணிபுரியும் தூய்மைக் காவலர்கள்.
சித்தப்பட்டிணத்தில் பணிபுரியும் தூய்மைக் காவலர்கள்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: கடந்த 6 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை என சித்தப்பட்டிணம் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைக் காவலர்கள் கவலையோடு தெரிவிக்கின்றனர் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷி வந்தியம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தப்பட்டிணம் ஊராட்சியில் தூய்மைக் காவலர்கள் 6 பேர் பணியாற்றுகின்றனர்.

இவர்கள் காலை 7 மணிக்கு பணியை தொடங்கி, ஊராட்சியில் உள்ள குப்பைகளை சேகரித்து 11 மணிக்கெல்லாம் அவற்றை குப்பைக் கிடங்கில் கொட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவர்களுக்கு வாரவிடுப்பும் கிடையாது. இந்நிலையில் இவர்களுக்கு தூய்மைப் பணி மேற்கொள்ளும்போது அணிய வேண்டிய சீருடை, கையுறை, முகக்கவசம் உள்ளிட்டவைகளை ஊராட்சி நிர்வாகம் முறையாக வழங்கு வதில்லை என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தூய்மைக் காவலர்கள் தரப்பில் கூறுகையில், “2 ஆண்டுகளுக்கு முன்பு வழங் கப்பட்ட சீருடை தற்போது கிழிந்தநிலையில் அதையே தான் அணிந்துபணி புரிகிறோம். குப்பைகளை சேகரித்து எடுத்துச் செல்ல வழங்கப்பட்ட மின்கலன் வாகனம் வழங்கப்படாமல் தள்ளுவண்டியில் வைத்து தான் கொண்டு செல்கிறோம்.

குப்பைகளை அள்ளும்போது துர்நாற்றம் வீசுகிறது என்பதால் முகக்கவசம், கையுறை கேட்டும் இதுவரை வழங்கப்படவில்லை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த 6 மாதமாக ஊதியமும் வழங்கவில்லை. ஊதியம் குறித்து ஊராட்சி செயலரிடம் கேட்டால், வரும்போது தருவோம் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருங்கள் எனக் கூறுகிறார்” என் கின்றனர்.

ஊராட்சி மன்றத் தலைவர் முருகனிடம் கேட்டபோது, “பணமேஇன்னும் வரவில்லை. வந்தால் தான் ஊதியம் போட்டுவிடுவோமே” என்றார்.

இதுகுறித்து ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர் துரை முருகனிடம் கேட்டபோது, “கடந்த ஜனவரி மாதம் வரையிலான ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. வாகனத்தை பொறுத்தவரை 36 வாகனங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டதில் 11 வாகனம் மட்டுமே வந்துள்ளன. அவற்றை சில ஊராட் சிகளுக்கு பகிர்ந்தளித்துள்ளோம். கையுறை, சீருடை, முகக்கவசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். ஊதியம் குறித்து ஊராட்சி செயலரி டம் கேட்டால், வரும்போது தருவோம் என்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in