Published : 19 Mar 2023 09:53 PM
Last Updated : 19 Mar 2023 09:53 PM

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு போராளியாக ஜெயித்திருக்கிறார்: 70 ஆண்டு பொதுவாழ்வு கண்காட்சியை பார்த்த நடிகர் வடிவேலு பிரமிப்பு

முதல்வர் ஸ்டாலினின் பொதுவாழ்க்கை குறித்த புகைப்பட கண்காட்சியை பார்த்த நடிகர் வடிவேலு

மதுரை: “முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு போராளியாக ஜெயித்திருக்கிறார்” என்று அவரின் 70 ஆண்டு பொதுவாழ்க்கை குறித்த புகைப்பட கண்காட்சியை பார்த்த நடிகர் வடிவேலு பிரமிப்பு தெரிவித்துள்ளார்.

மதுரை நத்தம் சாலை மேனேந்தல் மைதானத்தில் நடந்த மு.க.ஸ்டாலின் “புகைப்பட கண்காட்சி”யை நடிகர் வடிவேல் பார்வையிட்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டுகால பொது வாழ்க்கை குறித்த புகைப்படக் கண்காட்சி பிரமிப்பாக இருக்கிறது. கண்காட்சியில் உள்ள அனைத்தும் புகைப்படம் இல்லை நிஜம். படிப்படியாக அவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறினை இங்கு புகைப்படங்களாக வைத்துள்ளனர். இதனை காணும்போது நெஞ்சம் நெகிழ்கிறது. ஒரு மனிதனால் சும்மா ஒரு நபர் திட்டுவதைக் கூட தாங்க இயலாது.

எல்லாவற்றையும் தாங்கி இந்த அளவிற்கு மேல உயர்ந்து வந்து போராட்ட குணத்தோடு ஒரு போராளியாக ஜெயித்திருக்கிறார் தமிழக முதல்வர்.

தன்னம்பிகையும், தைரியம், உழைப்பும் தான் அவரை தமிழக முதல்வராக உயர்த்தியிருக்கிறது. மிகவும் பெருமையாக இருக்கிறது. திருமணமான 10-வது நாளில் சிறை சென்றதை கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று நிஜமாக பார்க்கிறேன். படமும் கதை சொல்லும்ற மாதிரி படம் இங்கு வரலாறை சொல்கிறது. மிகப்பெரிய அற்புதமான இந்த புகைப்பட கண்காட்சியை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கனும். இது வந்து அனைவருக்கும் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் அளிக்கும் வகையில் இந்த புகைப்பட கண்காட்சி உள்ளது. ரொம்ப சந்தோசமாக இருக்கு. இந்தியாவிலுள்ள அத்தனை தலைவர்களிடமும் நெருக்கமாக பழகி அந்த அன்புகளை சம்பாதித்து வைத்திருக்கும் காட்சிகளை பார்க்கும்போது ரொம்ப அருமையாக இருக்கு. என்ன சொல்வதென்றே தெரியல. மறுபடியும் இந்த நேரத்தில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கிறேன். நீண்ட ஆயுளோட பல்லாண்டு பல்லாண்டு காலம் கை கால் சுகத்தோடு இருந்து இந்த நாட்டு மக்களுக்கு நிறைய நல்லது செய்ய வேண்டும் என எல்லாம் வல்ல தெய்வத்தையும், குலதெய்வத்தையும் கேட்டுக்கொள்கிறேன். எல்லாரும் வந்து புகைப்பட கண்காட்சியை பாருங்கள்.

ஒரு மனிதன் எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறியிருக்கிறார் என்பதை பார்த்து வாழ்க்கை பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சிறையில் எவ்வளவு கஷ்டப்பட்டு இன்று முதல்வராக உயர்ந்திருக்கிறார். கண்டிப்பாக மக்களுக்கு நல்லது செய்வார் என்பது எனது உண்மையான நம்பிக்கை. எளிமையானவர், யாராக இருந்தாலும் உடனே போன் செய்து கேட்பார். ஒரு ஊழியருக்கு பிரச்சினை என்றால் உடனே போன் செய்து கேட்பார். அது போதுமே மக்களுக்கு அந்த பணி செய்தாலே போதுமே. எல்லாருடைய கஷ்டத்தையும் தீர்க்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு நிறைய இருக்கு. அவர் முதல்வராக வந்தது எங்களுக்கு சந்தோஷமாக இருக்கு. கரோனா காலத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து பல உயிர்களை காப்பாற்றினார்” என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x