நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் நீதி கேட்கும் நெடும் பயணம் - தஞ்சாவூரிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டனர்

தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து நேற்று டெல்லிக்குப் புறப்பட்ட விவசாயிகள். படம்: ஆர்.வெங்கடேஷ்
தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து நேற்று டெல்லிக்குப் புறப்பட்ட விவசாயிகள். படம்: ஆர்.வெங்கடேஷ்
Updated on
1 min read

தஞ்சாவூர்: விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, நாடாளுமன்றம் நோக்கி நீதி கேட்கும் நெடும் பயணத்தில் பங்கேற்க தஞ்சாவூரில் இருந்து நேற்று விவசாயிகள் புறப்பட்டனர்.

2019 மக்களவைத் தேர்தலின்போதும், டெல்லி விவசாயிகள் போராட்டத்தின்போதும் அளித்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்ற வலியுறுத்தி, டெல்லி நாடாளுமன்றம் நோக்கி நீதி கேட்கும் நெடும் பயணம், தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது.

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெறும் இந்தப் பயணத்தின் நிறைவாக மார்ச் 21-ம் தேதி டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க தெற்கு மாவட்டத்தலைவர் வி.எஸ்.வீரப்பன், வடக்குமாவட்டத் தலைவர் செந்தில்குமார்ஆகியோர் தலைமையில் 100-க்கும்அதிகமான விவசாயிகள், தங்கள் குடும்பத்தினருடன் நேற்று தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in