Published : 18 Mar 2023 06:14 AM
Last Updated : 18 Mar 2023 06:14 AM

புதுச்சேரி உள்கட்டமைப்புக்கு ரூ.2,300 கோடி நிதி வேண்டும்: அமித்ஷாவிடம் நமச்சிவாயம் வலியுறுத்தல்

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்.

புதுச்சேரி: விமான நிலைய விரிவாக்கம், மருத்துவப் பல்கலைக்கழகம் உட்பட புதுச்சேரியின் உள் கட்ட மைப்புக்கு ரூ. 2,300 கோடி நிதி தேவை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மனு அளித்து, கோரிக்கை விடுத்துள்ளார்.

விரைவில் அனுமதி தர நடவடிக்கை எடுப்பதாக அமித்ஷா உறுதி அளித்துள்ளதாகவும் நமச்சி வாயம் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் வரவுள்ள சூழலில், மத்திய அமைச்சர் அமித்ஷா அழைப்பின் பேரில்புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று அதிகாலை 3 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென் றார். டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து சுமார் 25 நிமிடங்கள் பேசினார்.

இச்சந்திப்பு தொடர்பாக உள் துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு, "நாடு முழுவதும் உட்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு ரூ. 1 லட்சம் கோடி வரை ஒதுக்கியுள்ளது. அதில் புதுச்சேரியை சேர்க்கக் கோரினோம். புதுச்சேரியில் வளர்ச்சிப் பணிகளில் விமான நிலைய விரிவாக்கம், புதிய சட்டப்பேரவை கட்டுதல், மருத்து வப் பல்கலைக்கழகம் என பல்வேறு பணிகளுக்கு ரூ. 2,300 கோடி நிதி தர கோரியுள்ளோம்.

புதுச்சேரிக்கு முக்கியப் பிரச்சி னையாக உள்ள நீண்ட கால கடனை தள்ளுபடி செய்ய கோரி யுள்ளோம். குறிப்பாக, மத்திய அரசு கடன் தொகையை முதல் கட்டமாக தள்ளுபடி செய்ய மனுவில் குறிப்பிட்டுள்ளதை அமைச்சரிடம் விளக்கினோம்.

அதேபோல், புதுச்சேரியில் உள்ள சில பழங்குடியினருக்கு எஸ்சி பிரிவிலேயே சான்றிதழ் தரப்படுகிறது. அதற்கு பதிலாக எஸ்டி பிரிவாக மாற்றி சான்று தர கோரியுள்ளோம்.

உள்ளூர் அதிகாரிகளுக்கு நீண்ட காலமாக பதவி உயர்வு தருவதில் உள்ள சிக்கலை தெரிவித்துள்ளேன். புதிய பிசிஎஸ்அதிகாரிகள் நியமனம், தற்போதுபணி நியமனத்தில் உள்ள சிக்கல் களை தீர்க்கவும் கோரியுள்ளோம். கோரிக்கை மனுக்கள் மீது விரைவில் அனுமதி தர நடவடிக்கை எடுப்பதாக அமித்ஷா உறுதி அளித்துள்ளார். மேலும் பல முக்கிய விஷயங்களுடன் மக்க ளவைத் தேர்தல் தொடர்பாகவும் பேசினோம்" என்று குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள சூழலில், வரும் மக்களவைத் தேர்தலை திட்டமிட்டு பணிகளை பாஜகவினர் விரைவுப்படுத்தியுள்ள சூழலில் தற்போது மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பாஜக அமைச் சர் நமச்சிவாயம் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பல முக்கிய விஷயங்களுடன் மக்களவைத் தேர்தல் தொடர்பாகவும் பேசினோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x