

மதுரை: அருணாச்சலப் பிரதேசம் மாண்டல பகுதியில் நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த மேஜர் ஜெயந்தின் உடல் விமானப்படை விமானம் மூலம் இரவு 8 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறது.
மதுரை விமான நிலையத்தில் அரசு மரியாதைக்கு பின் மேஜர் ஜெயந்த் உடல் பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்களம் கொண்டு செல்லப்படுகிறது.
அருணாசல பிரதேசம் மாண்டல பகுதியில் நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த லெப்ட்டினன்ட் கர்னல் ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்தின் உடல் தலைநகர் திசாப்பூரில் அஞ்சலி செலுத்தப்பட்டு விமானப் படை விமானம் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
அதன்படி, லெட்டினன்ட் கர்னல் ரெட்டி உடல் ஐதராபாத் கொண்டுசெல்லப்ப்பட்டு அங்கிருந்து தெலங்கானாவில் உள்ள ஏடாட்ரி பகுதிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதேபோல் மேஜர் ஜெயந்தின் உடல் அதே விமானம் மூலம் மதுரை கொண்டுவரப்படுகிறது. மதுரையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் இறுதி அஞ்சலிக்குப் பின் பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.