சர்வதேச கால்பந்து போட்டியில் சிவசக்தி நாராயணன் - தமிழகத்திற்கு பெருமை சேர்க்க தினகரன் வாழ்த்து

கால்பந்து வீரர் சிவசக்தி நாராயணன் | தினகரன் - கோப்புப் படங்கள்
கால்பந்து வீரர் சிவசக்தி நாராயணன் | தினகரன் - கோப்புப் படங்கள்
Updated on
1 min read

சென்னை: இந்திய அணி வெற்றி பெறுவதற்கான பங்களிப்பை வழங்கி தமிழ்நாட்டுக்கு சிவசக்தி நாராயணன் பெருமை சேர்க்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "மணிப்பூர் மாநிலத்தில் வரும் 20ம் தேதி தொடங்கும் இந்தியா - கிர்கிஸ்தான் - மியான்மர் நாடுகளுக்கு இடையேயான முத்தரப்பு சர்வதேச கால்பந்து போட்டிக்கான இந்திய அணியில் சிவகங்கை மாவட்டம் கண்டனூரை சேர்ந்த சிவசக்தி நாராயணன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தி அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.

போட்டிகளின் போது இந்திய அணி வெற்றி பெறுவதற்கான பங்களிப்பை வழங்கி தமிழ்நாட்டுக்கு சிவசக்தி நாராயணன் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகின்றேன்'' என தினகரன் வாழ்த்து கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in