அதிமுகவில் இருந்து பழனிசாமி வெளியேற வலியுறுத்தி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வட சென்னை வடக்கு (மே) மாவட்டம் சார்பில் பழனிசாமியை கண்டித்து சென்னை வில்லிவாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். படம்: ம.பிரபு
ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வட சென்னை வடக்கு (மே) மாவட்டம் சார்பில் பழனிசாமியை கண்டித்து சென்னை வில்லிவாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். படம்: ம.பிரபு
Updated on
1 min read

சென்னை: பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்துகொண்டு, அவர் தலைமையில் சந்தித்த 8 தேர்தல்களிலும் அதிமுகதோல்வி அடைந்துள்ளது. எனவே பழனிசாமிஅதிமுகவில் இருந்து வெளியேற வேண்டும்என வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வில்லிவாக்கம் பேருந்து நிலையம் எதிரே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவுக்கு ஓ.பன்னீர்செல்வம் எந்த துரோகமும்செய்யவில்லை. கட்சிக்கு துரோகம் செய்ததெல்லாம் பழனிசாமிதான். இன்றும் இந்திய தேர்தல் ஆணையத்தில் பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகத்தான் இருக்கிறார்.

இதை கட்சி தொண்டர்கள் புரிந்துகொண்டு,கட்சி ரீதியிலான 78 மாவட்டங்களிலும்பழனிசாமிக்கு எதிராக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும். பன்னீர்செல்வத்தை 2 முறை ஜெயலலிதா முதல்வராக்கியுள்ளார். கோடநாடு கொலை வழக்கில்,24 மணி நேரத்தில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும். ஆனால், திமுக அரசுஅமைதிகாத்து வருகிறது. 2024 மக்களவை தேர்தல் நெருங்கும்போது, குற்றவாளியை கைது செய்வார்கள்.

முதல்வர் பதவி கொடுத்த சசிகலாவை பழனிசாமி கட்சியை விட்டு நீக்கினார். முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை அறிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கிய பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்குகிறார். அதிமுகவை ஜாதி கட்சியாக மாற்ற முற்படுகிறார். கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிறார்கள்.

ஆனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தோல்வி அடைந்தார். இது இரட்டை இலை மீதான வெறுப்பால் நிகழவில்லை. பழனிசாமி மீதான வெறுப்பால் நிகழ்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in