

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் குருவிக்கார இன மக்களுக்கு பழங்குடியின சாதி சான்று வழங்கக்கோரி, 100-க்கும் மேற்பட்டோர் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வசித்து வரும் குருவிக்காரர் இன மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கோட்டாட் சியர் அலுவலகத்தில் திரண்டனர். பின்னர் மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் காசிநாததுரை, தாலுகா குழு செயலாளர் பி.செல்வராஜ் ஆகியோர் தலைமையில் சென்று கோட்டாட்சியர் கோபுவிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் தாலுகா குழு செயலாளர் பி.செல்வராஜ் கூறியதாவது: குருவிக்கார இன மக்களின் குழந்தைகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வரு கின்றனர். இவர்களுக்கு பழங்கு டியினர் என்ற சாதிச் சான்று வழங்கப்படவில்லை. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து குருவிக்காரர், கணிக்கர், மலைக்குறவர், நரிக்குறவர், காட்டுநாயக்கர் உள்ளிட்ட சமூகத்தினருக்கு பழங்குடியின சாதிச் சான்று வழங்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையிலும் சட்டம் இயற்றப்பட்டது. இந்நிலையில் இவர்களுக்கு உடனடியாக சாதிச் சான்றிதழை வழங்க கோட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறு கோரியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.